கோவை ரயில் நிலையத்தில் குவியும் வடமாநில தொழிலாளர்கள் - சொந்த ஊருக்கு பயணம்

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வதந்தியை அடுத்து கோவை ரயில் நிலையத்திலிருந்து பீகார், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வமாநிலத்தவர்களை தாக்கும் பொய்யான வீடியோ வெளியாகி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது கோவையில் ஜவுளித்துறை, தொழில்துறை உள்ளிட்டவற்றில் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த வீடியோ காட்சிகளை பார்த்துவிட்டு ஒரு சில வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கே செல்கின்றனர்.



பீகார், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் கோவை ரயில் நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.



கோவை ரயில் நிலையத்தில் காத்திருந்த வடமாநில தொழிலாளர்களிடம் கோவை மாநகர காவல் ஆணையாளர் அறிவுரையின் பேரில், அவர்களிடம் காவலர்கள் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.



இது குறித்து வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில், தாங்கள் ஹோலி பண்டிகையைக் கொண்டாடுவதற்காகச் செல்கிறோம். இங்கு அமைதியாக தான் உள்ளது. ஆனால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோக்களால் ஊரில் உள்ள தங்களது குடும்பத்தினர், அச்சத்தால் தங்களை புறப்பட்டு வரும்படி நிர்ப்பந்திப்பதாகத் தெரிவித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, வடமாநில தொழிலாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பையும் உறுதிப்படுத்தப்படும் எனச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...