வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புகின்றனர் -அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்

சென்னை நந்தனம் கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் மட்டுமே வெளிமாநில தொழிலாளர்கள் மிக மிக பாதுகாப்பாக இருக்கின்றனர் என தெரிவித்தார்.



சென்னை: தமிழகத்தில் மட்டுமே வெளிமாநில தொழிலாளர்கள் மிக மிக பாதுகாப்பாக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் 3 கோடியே 70 லட்சம் மதிப்பில் குளிர்சாதன வசதியுடன், 900 இருக்கைகளுடன் அமைய உள்ள கலையரங்கத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் இன்று அடிக்கல் நாட்டினார்.



அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,

நந்தனம் கல்லூரி மாணவர்களுக்காக 3.70 கோடி மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட உள்ளது. 2 கோடி நிதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டு, பின்னர் குளிர்சாதன வசதி போன்ற கூடுதல் வசதிகளுக்காக மேலும் நிதி ஒதுக்கப்பட்டு 3 கோடியே 70 லட்சமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆயிரம் மாணவர்கள் கலையரங்கத்தில் அமர முடியும்.

புள்ளியியல், பொது நிர்வாகம் வணிகவியல் நிதி மேலாண்மை ஆகிய 3 பாடப்பிரிவுகள் புதிய ஆட்சி அமைந்த பிறகு, இந்த கல்லூரியில் தொடங்கப்பட்டது. 1980களில் கருணாநிதி இங்கு மாணவர்களிடையே பேசியுள்ளார். வகுப்பறையில் நின்று கருணாநிதி பேசினார். கலையரங்கம் கட்டப்படுவதால் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும்.

365க்கும் மேல் முதுகலை மாணவர்கள் இங்கு பயில்கின்றனர். புறநகர் பகுதி மாணவர்கள் ஏராளமானோர் இங்கு பயின்று வருகின்றனர். பொருளாதார, சமூக அடிப்படையில் பின்தங்கிய மாணவர்கள் இங்கு கல்வி பயில்கின்றனர். நந்தனம் கல்லூரி சென்னையின் சிறப்புமிக்க அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது.

சைதை தொகுதி சம உறுப்பினராக இருந்நு சைதாப்பேட்டைக்கு பெருமை சேர்த்தவர் கருணாநிதி. எனவே கலையரங்கத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட வேண்டும் என்று இக்கல்லூரி முதல்வர் கருத்து தெரிவித்தார். அதை முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி கருணாநிதி பெயரில் கலையரங்கம் வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுகளில் தடை செய்யப்படும் மருந்துகளும், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகளும் தமிழகத்திலும் தடை செய்யப்படும்.

வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதிக்கப்படுவதாக கற்பனையான செய்திகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

கொரோனா காலகட்டத்தில் கூட எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது வெளி மாநில தொழிலாளர்களுக்கு 'ஒன்றிணைவோம் வா' திட்டம் மூலம் பல உதவிகளை செய்தவர் ஸ்டாலின், மேலும் முதலமைச்சராக வந்த பிறகு அவர்களது பயணச் செலவை ஏற்று, பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார்.

தமிழகத்தில் மட்டுமே வெளிமாநில தொழிலாளர்கள் மிக மிக பாதுகாப்பாக இருக்கின்றனர், முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவில் வட இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்றதால் பொறாமையில் சிலர் வீண் வதந்தியை கட்டவிழ்த்து விடுகின்றனர்.

கொரோனா விதிகளை தொடர்ந்து கடைபிடித்தால் வைரஸ் காய்ச்சல பாதிப்பையும் தடுக்க முடியும். வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த, தேவைப்பட்டால் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும், தற்போது அந்தளவிற்கு பாதிப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...