தாராபுரத்தில் புதிய வணிக வளாக கட்டிட பணி துவக்க விழா - பூமிபூஜை செய்து வைத்த அமைச்சர்கள்

தாராபுரம் அருகே ரூ.2.03 கோடி செலவில் கட்டப்படும் புதிய வணிக வளாக கட்டிட பணிகள் துவக்க விழாவில் அமைச்சர்கள், மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் புதிய வணிக வளாக கட்டிட பணிகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.

தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள கட்டிட பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில், தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திருப்பூர் நகராட்சி 4ம் மண்டல தலைவரும், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன். நகர கழக செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்வில், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தாராபுரம் நகராட்சி 19வது வார்டு பகுதியில் தினசரி மார்க்கெட் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.



இதில் இட நெருக்கடியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். மழை காலங்களில் தண்ணீர் மார்க்கெட்டுக்குள் தேங்கி நின்று வியாபாரத்தை பாதிப்படைய செய்து வந்தது. இதற்கு நிரந்தர தீர்வு காண கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் புதிய 55 கடைகள் கட்டப்பட உள்ளது.



இதற்கான கட்டுமான பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டது. அப்போது நகராட்சி ஆணையர் ராமர், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், நகராட்சி துணைத் தலைவர் ரவிச்சந்திரன், நகர கழக தலைவர் கதிரவன், நகர துணை செயலாளர்கள் கமலக்கண்ணன், தவச்செல்வன், செலின், நகரப் பொருளாளர் கபடி சக்திவேல், மாவட்ட பிரதிநிதிகள் யூசுப், சீனிவாசன், அய்யப்பன், பைக் செந்தில்குமார்.

நகராட்சி கவுன்சிலர்கள் துரை. சந்திரசேகர், இராஜேந்திரன், முரட்டாண்டி, ஸ்ரீதரன், ராஜாத்தி பாண்டியன், சாந்தி இளங்கோ, முத்துலட்சுமி பழனிச்சாமி, உஷாணா பானு, சேக்பரித், சாஜிதா பானு அகமது பாஷா, உமா மகேஸ்வரி, ஹரிஹரசுதன், மலர்வழி கணேசன், தனலட்சுமி அய்யப்பன், ஷாலினி பவர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...