வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தவறான செய்தி வெளிட்ட ஹிந்தி நாளிதழ் மீது கோவையில் வழக்குப்பதிவு!

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தவறான செய்தி வெளியிட்ட முன்னணி ஹிந்தி நாளிதழ் மீது கோவை மாநகரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ள தனிப்படை போலீசார் பீகாருக்கு விரைந்துள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தகவல்.


கோவை: வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய ஹிந்தி நாளிதழ் மீது கோவையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளிகள் தாக்கப்படுவதாக கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் கோவையில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தயாராகினர்.

இதனிடையே ஏற்கனவே தவறான வீடியோ செய்திகள் வெளியாகி உள்ளதாகவும், அவ்வாறு தகவல்களை பரப்பியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கோவை சிட்கோ தொழில்பேட்டையில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றும் தொழிற்சாலைக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் சென்று தொழிலாளர்களை சந்தித்து வீன் வதந்திகளை நம்ப வேண்டாம் மற்றும் அதனை பரபரப்ப வேண்டாம் என அறிவுறுத்தியதோடு, 5 அவசர எண்கள் உள்ள விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர்.



இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கூறியதாவது, கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் மூன்று நிறுவனங்களுடன் வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். நேற்று செய்தி அறிக்கை கொடுத்தபடி வாட்ஸ் அப் தகவலால் அச்சமடைந்துள்ளனர்.

அது தவறான தகவல், எந்த ஒரு அச்சமும் வேண்டாம் என நாங்கள் அறிவுரை வழங்கினோம். உதவி எண்களுடனான செய்தி அறிக்கை ஹிந்தியில் கொடுத்துள்ளோம். ஹிந்தியில் பேசும் அதிகாரிகளை அந்தந்த பகுதியில் போட்டுள்ளோம். வட மாநிலத்தவர்கள் அந்த வீடியோ பதிவால் தான் அதிகமாக அச்சமடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என பொய்யான வதந்திகளை, தவறான பொய்யான வீடியோக்கள் மூலமாக பரப்பியவர்களை கண்காணித்து கொண்டிருக்கிறோம்.

கோவை மாநகரில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மெயின் ஸ்ட்ரீம் இந்தி நாளிதழில் செய்தி வந்ததாக கொடுத்துள்ளார்கள். தவறான செய்தி பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, தனிப்படை போலீசார் பீகார் மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.

உண்மையிலேயே அந்த செய்தி வந்ததா என ஆய்வு செய்ய உள்ளார்கள். வீடியோவில் மார்ஃபிங் செய்து தவறான தகவல் பரப்பி வருகிறார்கள். தவறான வதந்திகளை பரப்புபவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஹிந்தி மொழி பேசும் காவலர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம்.

தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது எந்த பிரச்சினையும் இல்லை, வட மாநில தொழிலாளர்கள் நம்முடைய விருந்தினர்கள் என்ற செய்தியை முழுமையாக பரப்பி வருகிறோம். ஐ.டி.சட்டத்தில் மூன்று வருட கைது நடவடிக்கை எடுக்கப்படும்.

ரோந்து பணிகள் அதிகப்படுத்தியுள்ளோம் நகரம் முழுவதும் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் இரண்டு பெட்ரோல் வாகனம் இரண்டு சக்கர வாகனத்திலும் ரோந்து பணிகள் செய்யப்படுகிறது. 99% எந்த பிரச்சனையும் இல்லை என சொல்கிறார்கள் ஆனால் தவறான செய்தி காரணமாக அச்சம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...