பல்லடம் அருகே மது அருந்தியவரிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட மூவர் கைது!

பல்லடம் அருகே வெட்டுப்பட்டான் குட்டை பகுதியில் டாஸ்மாக் கடை அருகில் அமர்ந்து மது அருந்திய நபரை மிரட்டி, 3 சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மது அருந்தி கொண்டிருந்தவரிடம் நகைகளை பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பல்லடம் அருகேயுள்ள சேடபாளையம் அடுத்த குமரன் கார்டனில் வசித்து வருபவர் அசோக் குமார். இவர் நேற்று பிற்பகல் வெட்டுப்பட்டான் குட்டை என்ற இடத்தில் அரசு மதுபான கடைக்கு அருகில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் மதுபோதையில் இருந்த அசோக்குமாரை மிரட்டி அவர், அணிந்திருந்த மூன்று சவரன் செயின் மற்றும் அவரது இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அசோக்குமார், பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை மூவரையும் பிடித்து கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.



தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அம்மா பாளையத்தை சேர்ந்த தாமரை சந்திரன் (19), திண்டுக்கல் மாவட்டம் தருமத்துபட்டியை சேர்ந்த பிரவீன் குமார் (26) மற்றும் அருள் புறத்தைச் சேர்ந்த ராகுல் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...