தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் என வதந்தி பரப்பியவர் மீது கோவையில் வழக்குப்பதிவு!

கர்நாடகாவில் நடந்த வடமாநில இளைஞர் கொலை சம்பவம் குறித்த வீடியோவை தமிழகத்தில் வடமாநில இளைஞர்கள் மீது தாக்குதல் என டுவிட்டரில் வதந்தி பரப்பிய பீகார் மாநிலத்தவர் மீது கோவையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் என தவறான வீடியோவை டுவிட்டரில் பதிவிட்ட பீகார் மாநிலத்தவர் மீது கோவையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் கொடூரமாக தாக்கப்படுவதாக தவறான வீடியோவை டுவிட்டரில் பதிவிட்ட நிலையில் இச்சம்பவம் வடமாநிலத்தவர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பதிவில், பீகார் வாலிபர்கள் தமிழர்களால் கொடூரமாக நடுரோட்டில் வெட்டி கொல்லப்படுவதாக தெரிவித்து கொலை வீடியோக்களை பதிவிட்டுள்ளனர். இது குறித்து வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சைபர் கிரைம் போலீசார் வடமாநில இளைஞர்கள் குறித்த டுவிட்டர் பதிவுக்கு பிறகு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் yuvarajsinghrajput@yuvarajS90011068 என்ற இணைய முகவரியில் வன்முறையை தூண்டும் விதமான மோசமான பதிவை பதிவிட்டிருந்தார்.

அதாவது தமிழ்நாட்டில் இரக்கமின்றி பீகார் சகோதரகள் அடித்து கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால் இந்த நித்தீஸ் அரசாங்கம் அரசாங்கமானது அமைதி காக்கின்றனர். இந்த அரசாங்கம் துன்புறுத்தலில் மட்டுமெ அக்கறை கொண்டுள்ளது என இந்தி மொழியில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவோடு கோடாரியால் சில வாலிபர்கள் ஒரு வாலிபரை கொடூரமாக் வெட்டி கொல்லும் வீடியோவை பதிவிட்டிருக்கின்றார். பெரும் பதற்றமான இந்த வீடியோவில் உள்ள கோடாரி கொலை கர்நாடக மாநிலத்திலே நடந்தது.

பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் நடந்ததாக தவறாக பதிவிட்டிருக்கின்ற இந்த பதிவானது இருவேறு தரப்பினரிடையே வெறுப்பினை வளர்த்து ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக இருப்பதாக எண்ணி சைபர் கிரைம் போலீசார் 153 ஏ (பி), 505 (2), 66 (எஃப்) ஐ டி சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து குற்றவாளியை பிடிக்க திட்டமிட்டிருக்கின்றனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சிட்டி சைபர் கிரைம் போலிஸார் அடங்கிய தனிப்படை, வட மாநிலத்துக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...