கோவையில் மறைந்த பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் உடலுக்கு அமைச்சர் உதயநிதி அஞ்சலி!

பிரபல புகைப்பட கலைஞரும், வாட் எ கர்வாட் என்ற உணவு நிறுவனத்தின் இணை நிறுவனரான ஸ்டாலின் ஜேக்கப் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.


கோவை: மறைந்த பிரபல புகைப்பட கலைஞரான ஸ்டாலின் ஜேக்கப் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இணையத்தில் பிரபலமான What A Karward என்ற உணவு நிறுவனத்தின் இணை நிறுவனரும், பிரபல புகைப்பட கலைஞருமான ஸ்டாலின் ஜேக்கப் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் நேற்று சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது உடலானது கோவை கடைவீதி பகுதியில் உள்ள அவரது சொந்த இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.



இந்நிலையில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜேக்கப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட திமுக நிர்வாகிகள் பல உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...