கோவையில் பேங்க் ஆப் இந்தியா சார்பில் மாரத்தான் போட்டி - ஊழியர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பேங்க் ஆப் இந்தியா சார்பில் ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான மாரத்தான் போட்டியை கோவை மண்டல மேலாளர் அன்புமணி துவக்கி வைத்த நிலையில் ஊழியர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.


கோவை: ரேஸ்கோர்ஸ்மைதானத்தில் பேங்க் ஆப் இந்தியா சார்பில், வங்கி ஊழியர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

பேங்க் ஆப் இந்தியா வங்கி வருடம்தோறும் அவர்களது ஊழியர்களுக்கும் குடும்பத்தினருக்கும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பேங்க் ஆப் இந்தியா வங்கி அவர்களது ஊழியர்களுக்கும், குடும்பத்தினருக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.



அதன்படி இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மூன்று கிலோ மீட்டர் பிரிவுக்கான மாரத்தான் போட்டியை நடத்தியது. இதில் வங்கியின் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியை கோவை மண்டல மேலாளர் அன்புமணி துவக்கி வைத்தார்.

குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை மண்டல உதவி பொது மேலாளர்கள் முனுசாமி ராஜி, பிரதீப் ரஞ்சன்பால், மோகன் மரேதி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

மேலும் வருகின்ற 11ஆம் தேதி பாரதியார் பல்கலையில் கிரிக்கெட், சதுரங்கம், இசை நாற்காலி, கேரம்போர்டு, உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கொரொனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பேங்க் ஆப் இந்தியாஇந்த போட்டிகளை நடத்தாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...