கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.80 லட்சம் மோசடி - 3ஆண்டுகளுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது!

கோவையில் கொங்கு நாடு அன்னை சிட்ஸ் என்ற பெயரில், நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் ரூ.80 லட்சம் வரை மோசடி செய்து 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரொனால்ட் ரீகன் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவையில் சீட்டு கம்பெனி நடத்தி ரூ.80லட்சம் மோசடி செய்த நபரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கோவை குறிச்சி ஹவுஸிங் யூனிட் பேஸ்-1 சிட்கோ என்ற முகவரியில், கொங்கு நாடு அன்னை சீட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் 2017ஆம் ஆண்டு முதல் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடமிருந்து பணத்தைப் பெற்று, அதிக வட்டிதருவதாக கூறப்பட்டது.

அதன் அடிப்படையில் 40க்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் ஏலச்சீட்டு போட்டு இருந்தனர். ஆனால் நிறுவன தரப்பில் அவர்கள் தெரிவித்தபடி நடந்து கொள்ளவில்லை. ஏலச்சீட்டு தவணைக் காலம் முடிந்த பிறகும் அவர்கள் தொடர்ந்து பணம் தராமல் தாமதித்து ஏமாற்றி இருக்கின்றனர்.

இதனால் பணத்தைப் பறிகொடுத்த பொதுமக்கள் அந்த நிறுவனத்தை நடத்தி வந்த நிர்வாக இயக்குநர்களான ரொனால்டு ரீகன், டேவிட் சாமுவேல், ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது 2021 ஆம் ஆண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 120 பி, 406, 420, TEPID வழக்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் மூன்று ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ரொனால்ட் ரீகனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்த மோசடி வழக்கில் முன்னதாக டேவிட் சாமுவேல் கைதாகி இருந்த நிலையில், ராஜேந்திரன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...