வால்பாறையில் திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாள் விழா - பள்ளி மாணவர்களுடன் கேக் வெட்டி உற்சாக கொண்டாட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு பகுதியில் நகர மன்ற உறுப்பினர் பாஸ்கர் தலைமையில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கேக் வெட்டி பள்ளி குழந்தைகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு பள்ளியில் நகர திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

வால்பாறையில், முதல்வர் மு.க ஸ்டாலின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு பகுதியில் நகர மன்ற உறுப்பினர் பாஸ்கர் தலைமையில் ஸ்டேன்மோர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கேக் வெட்டி பள்ளி குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது.



பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. அதேபோல் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கும், சவரன்காடு, புது தோட்டம், லோயர் பாரளை, உள்ளிட்ட பள்ளி குழந்தைகளுக்கு லட்டு வழங்கப்பட்டது.



இந்நிகழ்வில் தனசேகரன், முனியப்பன், ஆனந்தராஜ், ஆனந்த் செந்தில், மைக்கேல், ராஜேந்திரன், ஜீவா, ராஜேந்திரன், ஜெயக்குமார், முருகேஷ், ரூபி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...