சோலையாறு அணை குடியிருப்பு பகுதியில் பாலம் அமைக்க பூமி பூஜை - நகர்மன்ற தலைவர் பங்கேற்பு

வால்பாறை நகராட்சிக்குட்பட்ட சோலையாறு அணை குடியிருப்பு பகுதிக்கு மழைக்காலங்களில் பொதுமக்கள் செல்ல நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.9.90 லட்சம் செலவில் பாலம் அமைப்பதற்கான பூமி பூஜையில் நகர்மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி கலந்து கொண்டு பூஜையைத் தொடங்கி வைத்தார்.


கோவை: சோலையாறு அணை குடியிருப்பு பகுதியில் மக்கள் நடந்து செல்ல பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட சோலையாறு அணை குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் மழைக்காலங்களில் பாதையைக் கடக்க சிரமமாக உள்ளதாகவும், பாலம் அமைத்து தரக்கோரியும் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.



பொதுமக்களின் கோரிக்கை ஏற்ற நகராட்சி நிர்வாகம் பாலம் அமைத்துத் தர உறுதியளித்தது. அதனடிப்படையில், ரூ.9.90 லட்சம் செலவில் அந்தப் பகுதியில் பாலம் அமைக்கவும், இதேபோல் நல்ல காத்து எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செல்லும் பாதையைச் சீரமைக்கவும், அப்பள்ளி மாணவர்கள் நலன் கருதித் தடுப்பு சுவர் கட்டுவதற்கும் பூமி பூஜை நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் அழகுசுந்தர வள்ளி மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், வார்டு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், இந்துமதி, ஜெயந்தி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...