முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு அலங்கியத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்கியம் பகுதியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்று பயனாளிகளுக்கு இலவச கண்ணாடிகளை வழங்கினார்.



திருப்பூர்: அலங்கியம் பகுதியில் முதல்வர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் பகுதியில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளை அமைச்சர் வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், ஒன்றிய செயலாளருமான செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது. முகாமில் அலங்கியம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சிலம்பரசன் கலந்து கொண்டார்.



இந்த முகாமில் ஜே.எஸ்.டபிள்யூ இந்தியா விஷன் இன்ஸ்டியூட் சார்பில் மருத்துவர்கள் கொண்ட குழுவினர் பொதுமக்களுக்கு கண் குறைபாடுகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான கண் கண்ணாடிகளை வழங்கினர்.



இதில் அலங்கியம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் பொதுமக்கள் கலந்து கொண்டர். மேலும் இந்த நிகழ்ச்சியில் அலங்கியம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி குப்பு, ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, சின்னக்கம்பாளையம் பேரூராட்சி செயலாளர் பன்னீர்செல்வம், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சசிகுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...