தாராபுரம் அருகே 62 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

தாராபுரம் அடுத்த வடுகபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 62 பேருக்கு 2 சென்ட் நிலத்துக்கான இலவச வீட்டு மனை பட்டாவை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே 62 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் கயல்விழி வழங்கினார்.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடுகபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பாக 62 பேருக்கு 2 சென்ட் நிலத்துக்கான இலவச வீட்டு மனை பட்டாவை தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார்.



இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் வினித், வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், வட்டாட்சியர் ஜெகஜோ மற்றும் திமுக மாவட்டச் செயலாளர் பத்மநாபன், நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தாராபுரம் நகரச் செயலாளர் முருகானந்தம், துணைச் செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...