கோவையில் வடமாநில தொழிலாளர்களுக்கு இந்தியில் பேசி கோவை மாவட்ட எஸ்.பி விழிப்புணர்வு!

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி குறித்து கோவையில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன், அவர்களது மொழியிலேயே பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.



கோவை: கோவையில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி குறித்து மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் இந்தியில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

துடியலூர் அடுத்துள்ள ராக்கிபாளையம் நேருநகர் பகுதியில் உள்ள அக்வாசாப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக சோசியல் மீடியா மூலம் ஏற்படும் அச்சத்தை தவிர்ப்பதற்காக கலந்துரையாடல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கலந்துக்கொண்டு வட இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்களிடம் ஹிந்தி மொழியிலேயே பேசி விழ்ப்புணர்வை ஏற்படுத்தினார்.



மேலும் கலந்துரையாடலின் போது வட இந்திய தொழிலாளர்கள் தங்கள் கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர்.



இதனை தொடர்ந்து எஸ்.பி.பத்ரிநாராயணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் குறிப்பாக கோவையில் கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளம் மூலம் வதந்திகள் பரப்பப்பட்டு வந்துள்ளன.

இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள், குறிப்பாக பிகார், மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அவர்களிடம் பேசும்பொது தான் தெரிந்தது அவர்களுக்கு எந்தவிதமான பயமும் இல்லை.

கோவையில் அவர்கள் வழக்கம் போல வேலைக்கு சென்று வருகிறார்கள். மேலும் மார்க்கெட் உள்ளிட்டவைகளுக்கு சென்று வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் ஊரிலுள்ள சொந்தகாரர்கள் தான் பயப்படுகிறார்கள்.

அதற்காக இங்குள்ளவர்களிடம் அவர்களது சொந்த மொழியிலேயே அவர்களது சொந்தகாரர்களிடம் இங்கு பாதுகாப்பாக உள்ளோம் என்பதை தெரிவிக்க வலியுறுத்தி உள்ளோம். மேலும் சமூக வலைத்தளம் மூலமாக தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தமிழக அரசு மற்றும் கோவை மாவட்ட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



இதுகுறித்து பீகாரை சேர்ந்த சிக்கந்தராகுமார் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தேவேஷிஸ் ஆகியோர் கூறியதாவது, கடந்த 7 வருடங்களாக கோவையில் தங்கி வேலை செய்து வருகிறோம். இங்கு எந்தவிதமான அச்சமும் இல்லை. உரிய பாதுகாப்புடன் இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



அக்வாசப் நிறுவன துணை தலைவர் நரேந்திரன் கூறியதாவது, எங்கள் கம்பெனியில் பல வருடங்களாக அதிகமான வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பீஹார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநில அரசுகளுடன் இணைந்து தொழிலாளர்களை நாங்கள் வேலைக்கு எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம், துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் உள்ளிட்ட போலீசார், 200க்கும் மேற்பட்ட வட இந்தியா தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...