கோவை தண்ணீர்பந்தல் ரயில்வே மேம்பாலத்திற்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி - 3 லட்சம் அபராதம் விதிப்பு!

தண்ணீர் பந்தல் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதை எதிர்த்து அங்கு பள்ளி, கடைகள் நடத்தி வரும் மூவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், சுயலாபத்திற்காக வழக்கு தொடர்ந்ததாக மூவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு.


கோவை: கோவை மாவட்டம் பீளமேடு அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கோவை பீளமேடு - சிங்காநல்லூர் ரயில் நிலையத்துக்கு இடையே உள்ள தண்ணீர் பந்தல் சாலையில் தண்டவாளத்தில் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை ஏற்று தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சார்பில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக அங்குள்ள சாலையையும் அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி மற்றும் நிறுவனங்களை நடத்தி வரும் பூங்கோதை, விஜயகுமார், மணி ஆகியோர் மேம்பாலம் கட்டினால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவோம் என தனித்தனியாக மூன்று வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தனர்.

கடந்த 2018ஆம் ஆண்டில் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. இறுதிகட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில் மக்கள் நலனுக்காக கொண்டு வரப்பட்ட திட்டத்தை சுய லாபத்திற்காக தடுத்து நிறுத்தியதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மேலும் பள்ளி மற்றும் தனியார் கம்பெனிகளை இயக்கி வரும் இவர்கள் பொது நலனிலும் அக்கரையாக இருக்க வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி குழந்தைகள், பணியாளர்கள் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் மேம்பாலம் அமைப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மக்கள் நலனுக்காக கொண்டு வந்த திட்டத்தை வழக்கு தொடர்ந்து பணிகளை முடக்கியதாக இந்த மூன்று மனுதாரர்களின் மனுவை தள்ளுபடி செய்வதாக அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிபதி, 3 பேருக்கும் தலா ஒரு லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இந்த அபராத தொகையை தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைய குழுவிற்கு 10 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் அந்த தொகையை வசூலிக்க கோவை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...