கோவை அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த நண்பனை கொன்ற தொழிலாளி - பரபரப்பு!

கோவை துடியலூர் அருகே மதுபோதையில் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த நண்பனை தலையில் கல்லைபோட்டு கொன்று விட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த ரமேஷ் (51) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: துடியலூர் அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த நண்பன் தலையில் கல்லைபோட்டு கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

துடியலூர் பகுதியில் குப்பை பொறுக்கும் வேலை செய்து வருபவர் முகமது பாசில்(28). இவரது மனைவி பண்ணாரி(27). இருவரும் தினமும் குப்பை பொறுக்கி அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து தெருவோரங்களில் தங்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு துடியலூர் பகுதியில் 51 வயதான ரமேஷ் என்பவர் பழக்கமாகி உள்ளார். இவர்கள் தினமும் குப்பை பொறுக்கி அதன்மூலம் வரும் வருமானத்தில் இரவில் மது அருந்தி வந்துள்ளனர்.

நேற்றிரவு முகமது பாசிலும், ரமேஷும் மது அருந்திவிட்டு உறங்கிய போது, முகமது பாசில் ரமேஷை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளார். அதற்கு மறுத்த ரமேஷை, முகமது பாசில் அசிங்கமாகத் திட்டி உள்ளார்.

இதனால் ஆத்திரத்திலிருந்த ரமேஷ் இன்று அதிகாலை 2 மணியளவில் முகமது பாசில் தூங்கிக்கொண்டிருந்த போது, கல்லை தலையில் போட்டு கொலை செய்து விட்டு, துடியலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்த முகமது பாசில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த நண்பனின் தலையில் கல்லைபோட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...