கோவையில் பெட்ரோல் பங்கில் நின்றிருந்த லாரியின் பேட்டரியை திருடிய இளைஞர் கைது!

கோவை ஆத்துப்பாலம் அருகே தனியார் பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரியில் இருந்து பேட்டரிகளை திருடிய இளைஞரை லாரி உரிமையாளர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் தப்பியோடிய இருவருக்கு போலீஸ் வலைவீச்சு.


கோவை: கோவை மாவட்டம் ஆத்துப்பாலம் அருகே பெட்ரோல் பங்கி நின்றிருந்த லாரியில் பேட்டரியை திருடி விற்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆத்துப்பாலம் அருகேயுள்ள குறிச்சி பிரிவு என்.பி.இட்டேரி பகுதியை சேர்ந்தவர் ஜபாருல்லா (35). இவர் சொந்தமாக லாரி வைத்து இயக்கி வருகிறார். இந்நிலையில் அவர் தனது லாரியை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைப்பது வழக்கம்.

அதேபோல கடந்த 20 நாட்களாக பெட்ரோல் பங்கில் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றிரவு லாரியில் இருந்து சிலர் பொருட்களை எடுப்பதாக ஜபாருல்லாவிற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர் தனது நண்பர்களுடன் வந்து பார்த்தபோது மூன்று இளைஞர்கள் லாரியில் இருந்து பேட்டரிகளை திருடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களை பிடிக்க முயன்ற போது இருவர் தப்பிச்சென்றனர்.

பிடிபட்ட நபரை ஜபாருல்லா குனியமுத்தூர் போலீஸில் ஒப்படைந்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் கரும்புக்கடையை சேர்ந்த ரிஸ்வான் சுகைல் (24) என்பதும் நண்பர்களுடன் சேர்ந்து லாரி பேட்டரியை திருடி விற்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த 2 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற முகமது செரீப், அப்சல் ரகுமான் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...