கோவை வெள்ளியங்கிரி மலையேறிய சென்னை தனியார் நிறுவன மேலாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்!

கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏறிய சென்னை தனியார் நிறுவன மேலாளரான கதிரவன் என்பவர், தனது நண்பர்களுடன் 4வது மலைக்கு வந்த போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏறிய சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி வடக்கு பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (43). இவர் சென்னை புவி டெக்னாலஜி என்ற நிறுவனத்தில் பாதுகாப்பு பிரிவு மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கோவை வந்த கதிரவன் வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் தனது நண்பர்கள் 16 பேருடன் கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலையில் ஏறியுள்ளார். பின்னர் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து விட்டு, இன்று கீழே இறங்கியுள்ளனர்.



அப்போது கதிரவன் குழுவினர் 4 ஆவது மலைக்கு வந்த போது, இரவு 8 மணியளவில் திடீரென கதிரவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து உடன் வந்த நண்பர்கள் அவருக்கு முதலுதவி அளித்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கிருந்த வனத்துறையினர் உதவியுடன் கதிரவன் உடல் கீழே கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...