வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் என பரவிய வதந்தி - திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பீகார் குழுவினர் ஆய்வு

வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக இணையத்தில் வெளியான வதந்தியை தொடர்ந்து, தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த பீகார் மாநில குழுவினர், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் ஆய்வு செய்து, வடமாநிலத்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.


திருப்பூர்: வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் என பரவிய வதந்தி குறித்து திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பீகார் மாநில குழுவினர், ஆய்வு மேற்கொண்டனர்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வீடியோக்களை கொண்டு திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் நடந்ததாக பீகாரை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் அச்சமடைந்தனர்.

மேலும் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து தவறான வீடியோக்கள் மூலம் வதந்தி பரப்பிய விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக பீகார் மாநில குழு ஒன்று தமிழகம் வந்தது.



இந்த ஆய்வு குழுவில், பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன், தொழிலாளர் ஆணையர் அலோக் குமார், சிறப்பு பணி படை காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன் உள்ளிட்டோர் இடம்பெற்று உள்ளனர்.



நேற்றைய தினம் சென்னை வந்த பீகார் மாநில ஆய்வுக்குழுவினர், திருப்பூரில் இன்று ஆய்வு மேற்கொன்டனர். முன்னதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர். திருப்பூர் அருள்புரம், மாநகரில் உள்ள ஏற்றுமதி நிறுவனம் மற்றும் பெருமாநல்லூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களில் பீகார் குழுவினர் ஆய்வு செய்தனர்.



அப்போது, அங்கு தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்களுக்கான இடம், சுகாதாரம் நாள்தோறும் விடுதியில் வழங்கப்படும் உணவு, சம்பளம் மற்றும் ஏதேனும் பிரச்சினைகள் நிறுவனத்தில் தொழிலாளர்கள் தரப்பில் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதில் ஒவ்வொருவரும் தங்களது பணி பாதுகாப்பு மற்றும் தமிழகத்தில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கிறோம் என்பது குறித்து பிகாரில் இருந்து வந்த குழு அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். தாங்கள் இங்கு ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...