கோவை ஈஷாவில் 15 ஆண்டுகளாக தங்கியிருந்த நெல்லையை சேர்ந்தவர் மாயம் - ஆலாந்துறை போலீசார் விசாரணை!

கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தங்கியிருந்த நெல்லையை சேர்ந்த கணேசன் என்பவர், வெள்ளியங்கிரி மலையேற போவதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 15 ஆண்டுகளாக தங்கியிருந்த நெல்லையை சேர்ந்த நபர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் கனேசன் (45). இவர் கடந்த 2007ஆம் ஆண்டில் ஈஷா யோகா மையத்திற்கு வந்து இணைந்துள்ளார். பின்னர் அவரது பெயரை சுவாமி பவதுதா எனவும் மாற்றிக் கொண்டுள்ளார்.

இதனிடையே கடந்த 15 ஆண்டுகளாக ஈஷா யோகா மையத்தில் இருந்த கணேசன், கடந்த 28 ஆம் தேதி வெள்ளியங்கிரி மலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இதுவரை திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது உறவினர்களுக்கு அழைத்து விசாரித்த போது அவர் சொந்த ஊருக்கும் செல்லவில்லை என தெரியவந்தது. இதையடுத்து ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஸ்ராஜா என்பவர் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...