கோவையில் லாரி பேட்டரி திருடிய இளைஞர் கைது - கூட்டாளிகளுக்கு போலீஸ் வலை!

கோவை ஆத்துபாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜபாருல்லா என்பவரின் லாரியில் பேட்டரி திருடிய ரிஸ்வான் சுகைல் என்பவரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து, தப்பியோடிய 2 பேரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.



கோவை: கோவை குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜபாருல்லா சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவர் தனது லாரியை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைத்து இருந்தார். இவரது லாரியில் இருந்து சிலர் பொருட்களை திருடுவதாக ஜபாருல்லாவுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தமது நண்பர்களுடன் அவர் அங்கு விரைந்து சென்று பார்த்தார். அப்பொழுது மூன்றுபேர் லாரியில் இருந்து பேட்டரியை திருடிக் கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்களை ஜபாருல்லா பிடிக்க முயன்றார். அப்பொழுது, ஒருவர் மட்டும் சிக்கிக் கொண்டார். மற்ற இரண்டு பேரும் தப்பி ஓடிவிட்டனர்.



இதை அடுத்து அவரை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஜபாருல்லா ஒப்படைத்தார். விசாரணையில், அந்த நபர் கரும்பு கடையைச் சேர்ந்த ரிஸ்வான் சுகைல் என்பதும், இவர் தனது நண்பர்கள் முகமது ஷெரீப், அப்சல் ரகுமான் ஆகியோருடன் சேர்ந்து லாரியில் இருந்து பேட்டரியை திருடி விற்க முயன்றதும் தெரியவந்தது.

இதை அடுத்து ரிஸ்வான் சுகைலை போலீசார் கைது செய்ததோடு, தப்பி ஓடிய 2 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...