சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் - வால்பாறையில் போக்குவரத்து பாதிப்பு!

கோவை வால்பாறையில் கடைகள் அதிகமுள்ள அண்ணாசிலை, காந்திசிலை பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அனுமதியின்றி நிறுத்தப்படுவதாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய சாலை அமைக்கும் பணி நிறைவடைந்தது. வால்பாறை அண்ணா சிலை பகுதியில் இருந்து காந்தி சிலை பகுதி வரை கடைகள் அதிகம் உள்ளது. அங்கு பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் வாகனத்தில் வந்தால் வாகனத்தை கடை முன்பு நிறுத்திவிட்டு செல்கின்றனர்.



மேலும், வால்பாறை பகுதியில் சுற்றுலா வரும் மக்களும் வாகனங்களை சாலை ஓரம் நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே, வால்பாறையில் வாகனங்களை நிறுத்துவதற்காக பார்க்கிங் அமைத்துத்தர வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



புதிய சாலை அமைத்து பின்பு சாலையின் இரு புறங்களிலும் வெள்ளைகோடு போடவும், சாலையின் நடுவே வெள்ளை கோடு அமைக்கவும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...