150 கிராம் தங்கத்தோடு வடமாநில இளைஞர் தப்பியோட்டம் - கோவை போலீசார் விசாரணை!

கோவையில் ரகுகுமார் என்ற தங்க பட்டறை உரிமையாளரிடம் ஆபரணங்கள் செய்வதற்காகப் பெற்ற 150 கிராம் தங்கத்துடன் தப்பியோடிய மேற்கு வங்கத்தை சேர்ந்த பாபன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரகு குமார் (வயது45). இவர் பொன்னையராஜபுரம் பகுதியில் தங்க பட்டறை நடத்தி வருகின்றார். இவரிடம் கடந்த ஐந்து வருடங்களாக பாபன் என்ற நபர் பணியாற்றி வந்தார். மேற்கு வங்கத்தைச் சார்ந்த இவர், ரகுகுமார் தரும் தங்க உலோகத்தை ஆபரணமாக மாற்றி தருவது இவரது பணி.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 7 லட்சம் மதிப்பிலான 150 கிராம் எடையுள்ள தங்கத்தை கொடுத்து தோடு மற்றும் கம்மல் செய்து தர கேட்டுள்ளார்.

ரகுகுமாரிடம் அந்த தங்க உலோகத்தைப் பெற்றுக் கொண்ட பாபன், தங்க நகை ஆபரணங்கள் செய்யாமல், தனது சொந்த ஊருக்கு தங்கத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து ரகுகுமார் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாபனை தேடி வருகின்றனர். தங்க நகை பட்டறையில் வேலை செய்யும் வட மாநிலத்தவர்கள் சில நேரங்களில் தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி ஓடுவது கோவையில் தொடர் கதையாகி வருவது தங்கப்பட்டறை உரிமையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...