கோவை கார் பார்க்கிங்கில் தூங்கிய போதை ஆசாமிகள் - தர்ம அடி கொடுத்து விரட்டியதால் பரபரப்பு!

மது குடித்து விட்டு கார் பார்க்கிங்கில் தூங்கிக் கொண்டிருந்த கோவை கணபதியை சேர்ந்த கார்த்திக்கேயன், ஸ்டீபன் இருவரையும், மர்மநபர்கள் பயங்கர ஆயுதங்கள் மூலம் தாக்கினர். காயடைந்த கார்த்திக்கேயன், ஸ்டீபன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


கோவை: கோவை உடையாம்பாளையம் கணபதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நண்பர் ஸ்டீபன் என்பவரும் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மதுபான கடையில் மது வாங்கி அங்குள்ள பாரில் மது குடித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் இருவரும் ராம் நகரில் உள்ள மார்க்கெட் சாலை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங்கில் படுத்துத் தூங்கியுள்ளனர். அப்போது அங்கு சென்ற இரண்டு மர்ம நபர்கள், குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்த இருவரையும் எழுப்பி அடித்துள்ளனர்.

மேலும், கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு அவர்கள் இருவரையும் அடித்து விரட்ட அந்த மர்ம நபர்கள் முயற்சித்துள்ளனர். இந்த நிலையில், குடிபோதையில் இருந்த இருவரும் வலி தாங்க முடியாமல் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரும் முன்பே, தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

காயம்பட்ட இருவரும் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதால், இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மதுபோதையில் தூங்கிய இருவரை, எழுப்பி தர்ம அடி கொடுத்தவிவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...