கோவையில் 50 பந்தய புறாக்கள் திருட்டு - வெளிமாநிலத்தில் விற்க முயற்சியா? என விசாரணை

கோவை போத்தனூரில் வீட்டின் மொட்டை மாடியில் ரகு என்பவர் வளர்த்து வந்த 50-க்கும் மேற்பட்ட பந்தயப் புறாக்கள் மற்றும் 4 சேவல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை போத்தனூர், அண்ணா நகரை சேர்ந்தவர் ரகு (வயது25). இவர் தனது வீட்டு மாடியில் புறா மற்றும் சேவல்களை வளர்த்து வருகிறார். இவர் வளர்க்கும் அனைத்தும் பந்தய புறாக்கள். இந்த நிலையில் நள்ளிரவு வீடு புகுந்த மர்ம நபர்கள் புறா கூண்டில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பந்தய புறாக்களை திருடி சென்றனர்.

மேலும், அங்கிருந்த நான்கு சேவல்களையும் திருடி சென்றுள்ளனர். காலையில் வழக்கம்போல் புறாவுக்கு தண்ணீர் வைக்கவும், இரை போடவும் ரகு சென்று பார்த்தபோது புறா மற்றும் சேவல் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போத்தனூர் காவல் நிலைய போலீசார் புறா திருடர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருடப்பட்ட புறா மற்றும் சேவல்களின் மதிப்பு ரூ.60 ஆயிரம் எனத் தெரியவந்துள்ளது. பந்தய புறாக்கள் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாகவும், அந்த நோக்கத்தில் இந்தப் புறாக்கள் திருடப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...