கோவையில் முதியவரைத் தாக்கி செல்போன், பணம் பறிப்பு - சிறுவர்கள் 3 பேர் கைது!

கோவை சிவானந்தகாலனி சாலையில் இரவில் பப்புசிங் என்ற முதியவர் நடந்து சென்றபோது, அவரை அடித்து துன்புறுத்தி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற வழக்கில்16, 17 வயது என 3 சிறுவர்கள் கைதாகியுள்ளனர். தலைமறைவாகியுள்ள கிறிஸ்டோபர் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை நாகராஜபுரத்தை சேர்ந்தவர் பப்பு சிங் (வயது51). இவர் பேக்கரி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கேக் ஷாப் அமைந்திருக்கும் சிவானந்த காலனி சாலையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளது.

அப்போது,பப்புசிங் என்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத கும்பல், அவரை அடித்து துன்புறுத்தி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 2,200 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடியது.முதியவர் கூச்சலிட்டு உதவிக்கு பொதுமக்களை அழைக்கும் முன்னே வழிப்பறிக் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர்.

இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் பப்பு சிங் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், 16 வயது சிறுவர்கள் 2 பேர், 17 வயது சிறுவன் ஒருவர் ஆகியோர் பிடிபட்டனர்.தப்பியோடிய கிறிஸ்டோபர் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் முதியவரைத் தாக்கிய பணம், செல்போன் பறிப்பில் சிறுவர்கள் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...