வேலைவாய்ப்பு வழங்குங்கள்..! - மயக்கவியல் தொழில்நுட்புநர்கள் கோவை ஆட்சியரிடம் மனு

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மயக்கவியல் தொழில்நுட்புநர் படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து மயக்கவியல் தொழில் நுட்புநர்கள் நலச் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் படித்து முடித்தும் இதுவரை வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும், உடனடியாக வேலைவாய்ப்பை வழங்க கோரியும் தமிழ்நாடு அனைத்து மயக்கவியல் தொழில் நுட்புநர்கள் நலச் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மயக்கவியல் தொழில் நுட்புநர் படிப்பை முறையாக படித்து பயிற்சி பெற்றுள்ள நிலையில், படிப்பை முடித்து 10 வருடங்களுக்கு மேலாகியும் தங்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. கோவிட் காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளிலும் அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றி வந்தோம்.

அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து, இதுவரை தங்களுக்கு வேலை வழங்கவில்லை. உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன் படித்து முடித்த தங்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

தற்போதைய கல்விமுறை மற்றும் மதிப்பெண் முறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு பதிவு மூப்பை மதிப்பெண் முறையில் பணி நியமனம் செய்யும்பொழுது தங்களுக்கு 50 சதவிகிதம் முன்னுரிமை வழங்க வேண்டும். அறிவியல் பாடப் பிரிவு மற்றும் கலை பாடப்பிரிவில் படித்தவர்களுக்கும் வேலை வழங்கிட வேண்டும்.

இவ்வாறு தொழில் நுட்புநர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...