பொள்ளாச்சி அருகே தோட்டத்தில் புகுந்த 6 அடி நீள மலைப்பாம்பு - பத்திரமாக மீட்ட வனத்துறை!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே புளியங்கண்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் பதுங்கியிருந்த 6 அடி நீள மலைப்பாம்பை, வேட்டை தடுப்பு காவலர் சக்திவேல் லாவகமாக பிடித்தார். பின்னர் பாம்பு, ஆழியார் அருகே உள்ள வனப்பகுதிக்குள் விடப்பட்டது.



கோவை: பொள்ளாச்சி அடுத்த புளியங்கண்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்கள் வேலை செய்த பகுதியில் மலைப்பாம்பு பதுங்கியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



இது குறித்து தோட்டத்து உரிமையாளருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், தோட்டத்து உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.



பின்னர் அங்கு விரைந்து வந்த வனத்துறை வேட்டை தடுப்பு காவலர் சக்திவேல் என்பவர் சுமார் ஆறு அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்தார்.

இதையடுத்து, அந்த மலைபாம்பு ஆழியார் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...