தாராபுரத்தில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் கேள்வி, பதில் போட்டி

தாராபுரத்தில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் கிளையின் சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்ற 400க்கும் மேற்பட்டோருக்கு வாஷிங் மெஷின், தங்க நாணயம், தையல் மெஷின் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: தாராபுரத்தில் நடைபெற்ற இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்டோருக்கு வாஷிங் மெஷின், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் கிளையின் தலைவர் உமர் பாரூக் தலைமையில் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கேள்வி பதில் போட்டி ஏன் என்ற தலைப்பில் மாநில துணை தலைவர் சையது இப்ராஹிம் உரையாற்றினார்.

இதேபோல், சஹாபிய பெண்களின் தியாகம் என்ற தலைப்பில் மாநில துணை செயலாளர் அப்துல் ரகுமான், மறுமை நாள் என்ற தலைப்பில் ஜமாத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் அல்தாபி ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 400க்கும் மேற்பட்டோருக்கு வாஷிங் மெஷின், தங்க நாணயம், தையல் மெஷின் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...