தாராபுரம் அமராவதி ஆற்றில் 2 தடுப்பணைகள் - கட்டுமான பணியை துவக்கி வைத்த அமைச்சர்கள்!

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ.21 கோடி மதிப்பீட்டில் 2 தடுப்பணைகள் கட்டும் பணியை தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் தடுப்பணைகள் கட்டும் பணியை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

தாராபுரம் வழியாக செல்லும் அமராவதி ஆற்றில் தடுப்பணைகளை கட்டி தொகுதிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளின் விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது தொகுதி சார்ந்த கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது.



இந்நிலையில், கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர தமிழ்நாடு அரசு முழு ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் மாம்பாடி ஊராட்சி புங்கன் துறை அருகே செல்லும் அமராவதி ஆற்றிலும், கொளத்துப்பாளையம் பேரூராட்சி கவுண்டன் வலசு கிராமத்தின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றிலும் தடுப்பணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தலா 10 கோடியே 70 லட்சம் செலவில் மொத்தம் இரண்டு அணைகளுக்கும் சேர்ந்து 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் தடுப்பணைகள் கட்டும் பணியின் துவக்க விழா இன்று நடைபெற்றது.



இந்த விழாவில், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி பூமிபூஜை செய்து கட்டுமான பணிகளை துவக்கி வைத்தனர்.



இந்த நிகழ்வில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...