கோவையில் பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு - ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்!

கோவை செட்டிப்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில், அமில வீச்சினால் பாதிக்கப்படுபவர்களுக்கான சட்ட உதவி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கோவை: கோவை செட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் செட்டிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



இந்த முகாமில், கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான கே.எஸ்.எஸ்.சிவா, பள்ளி மாணவர்களுடன் உரையாடி சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.



குறிப்பாக அமில வீச்சினால் கடுமையாக பாதிக்கப்படும் நபர்களுக்கு செய்யப்படும் சட்டப் பணிகள் உதவி மற்றும் இதர சட்ட உதவிகள் குறித்து மாணாக்கர்களிடம் எடுத்துரைத்தார்.

கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சேரன், ஓசூர் சட்டம் மற்றும் பொதுத்தேர்வு குறித்த உளவியல் ஆலோசனைகள் குறித்து விளக்கினார். குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்தும் இந்த முகாமில் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

செட்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சேரன், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...