பேரூர் கோவிலில் மயங்கி விழுந்து உயிரிழந்த கேரள நபர் - கதறி அழுத உறவினர்கள்!

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவர், மறைந்த தனது அக்காவிற்கு படித்துறையில் திதி கொடுத்துவிட்டு கோவை பேரூர் கோவில் தரசினம் செய்தபோது தீடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணசாமி என்கிற பாபு (வயது55). மர ஆசாரி மற்றும் கோவில்களில் சண்டமேளம் வாசித்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்குமுன் தனலட்சுமியின் அக்கா காலமானார். அவருக்கு திதி கொடுப்பதற்காக நாராயணசாமி, தனலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் வேனில் இன்று காலை கோவை வந்தனர்.

முன்னதாக பேரூர் படித்துறையில் திதி கொடுத்துவிட்டு, பேரூர் பட்டீஸ்வரரை தரிசனம் செய்தனர். பின்னர் காலபைரவர் சன்னதியில் தரிசனம் செய்தபோது நாராயணசாமி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, உறவினர்கள் 108 ஆம்புலென்ஸில் அவ மருத்துவனைக்கு அழைத்துச்சென்றனர். அதில் வந்த அவசரகால மருத்துவர் பரிசோதனை செய்தபோது நாராயணசாமி உயிரிழந்தது தெரியவந்தது.

இதைக்கேட்டு கதறி அழுத உறவினர்களால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது. இதையடுத்து பேரூர் கிராம நிர்வாக அலுவலர், பேரூர் போலீசார் விசாரணைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



கோவில் வளாகத்தில் பக்தர் ஒருவர் உயிரிழந்ததால் பேரூர் கோவில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் வாஸ்து சாந்தி செய்து நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...