நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இரு மாதங்களில் தார் சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகவான் கார்டன் பகுதியில் சாலை வசதி செய்து தரக்கோரி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதன்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பகவான் கார்டன் பகுதியில் 2016-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட குடியிருப்பில் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் இதுவரை தார் சாலை அமைக்கப்படாமல் மண் சாலையாகவே இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறுவதால் பொதுமக்கள் நடந்து செல்லவே சிரமம் ஏற்படுவதுடன், பள்ளி வாகனங்களும் சேற்றில் சிக்கிக் கொள்வதால் அப்பகுதிக்குள் வருவதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பாக கடந்த 2021 முதல் பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனால் ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தப்படாததை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 20 நாட்களுக்குள் சாலைப் பணிக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் தார் சாலை அமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் உறுதியளித்தார்.



இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும், இரண்டு மாதங்களுக்குள் சாலை அமைக்கப்படாவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...