வடமாநில தொழிலாளர்கள் குறித்து பேசுவதற்கு முதல்வர் நேரம் ஒதுக்கவில்லை..! - லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் தகவல்!

வடமாநில தொழிலாளர்கள் தாக்குவது போன்று தவறான வீடியோவை பரப்பியவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேச முயற்சி செய்தேன். ஆனால் தனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்று ஆளுநர் சந்திப்பு பிறகு பீகார் மாநில லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்தார்.


சென்னை :பீகார் மாநில தொழிலாளர்கள் குறித்து பேச தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் ஒதுக்கவில்லை என பீகார் மாநில லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.



சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பீகார் மாநில லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் நேரில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சிராக் பஸ்வான் பேசியதாவது,

பீகார் மக்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து விசாரணை நடத்த ஆளுநரிடம் கோரிக்கை வைத்தேன்.



பீகார் மக்களின் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பீகார் மக்களின் பங்கும், பங்களிப்பும் அதிகமானது. பீகாருக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நல்லுறவு இருக்கிறது. அனைவரும் பாதுகாப்பான சூழலில் வாழும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் தவறான வீடியோவை பரப்பி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதலமைச்சரை இந்த பிரச்சனை தொடர்பாக சந்தித்து பேசுவதற்கு என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன். ஆனால், நேரம் கிடைக்கவில்லை.

முதலமைச்சரின் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவுக்கு எங்கள் மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் மக்கள் பிரச்சனை தொடர்பாக சந்தித்து பேச நேரம் கேட்ட எனக்கு ஒதுக்கப்படவில்லை.

இவ்வாறு சிராக் பஸ்வான் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...