மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை - வனத்துறையினர் விசாரணை

மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட மானார் வனப்பகுதியில் வன காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மர்மமான முறையில் இறந்து கிடந்த 10 வயதுடைய பெண் யானையின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது வனத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட நெல்லித்துறை காப்புக்காடு, மானார் சுற்று வனப்பகுதியில் காரமடை வன காவலர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மானார் சரக வனப்பகுதியில் 8 முதல் 10 வயதுடைய பெண் காட்டு யானை உயிரிழந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

யானை உடலின் மேற்பகுதியில் எந்தவித காயங்களும் இல்லை. இதனிடையே யானையின் இறப்பு குறித்து உடற்கூறாய்வு நடைபெறுகிறது. அதன்பின்னரே யானையின் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...