கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்த மயில்கள் - வனத்துறை விசாரிக்க கோரிக்கை

கோவை டாடாபாத் பகுதியில் இரண்டு மயில்கள் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளித்தும் விசாரணை நடத்தவில்லை என்றும், மயில்கள் கடந்த சில நாட்களாக சமூக விரோதிகளால் வேட்டையாடப்படும் நிலையில், உரிய விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகம் அருகே மயில்கள் இறந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் இரண்டு மயில்கள் இறந்து கிடந்துள்ளன. அதில் ஒரு மயிலை நாய்கள் தூக்கிச் சென்றிருக்கின்றன. இந்நிலையில் மயில்கள் இறப்பு குறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளித்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இறந்த மயில்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததா? அல்லது வேட்டையாடப்பட்டதா? என்பது குறித்து வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு மருந்துக்காகவும், இறைச்சிக்காகவும் சமூக விரோதிகளால் மயில்கள் வேட்டையாடப்பட்ட சம்பவமும் கோவையில் அரங்கேறி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...