கோவையில் சாலிடாரிட்டி அமைப்பு சார்பில் பொதுக்கூட்டம்

சாலிடாரிட்டி அமைப்பு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுதிமிக்க போராட்டத்தின் எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவையொட்டி சமூக ஒற்றுமைக்கான பிரச்சாரப் பயணம் தமிழகம் முழுவதும் பயணித்து கோவையில் முடிவடைந்தது. இதைதொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.


கோவை: சாலிடாரிட்டி அமைப்பு சார்பில் சமூக ஒற்றுமைக்கான பிரச்சாரப் பயண பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது.

சாலிடாரிட்டி அமைப்பு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுதிமிக்க போராட்டத்தின் எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவையொட்டி சமூக ஒற்றுமைக்கான பிரச்சாரப் பயணம் தமிழகம் முழுவதும் பயணித்து கோவையில் முடிவடைந்தது. அதன் நிறைவு பொதுக்கூட்டம், கோவை கரும்புகடையில் நடைபெற்றது.



சமூக தலைவர்கள், ஆன்றோர் பெருமக்கள் மற்றும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட கோவை ரேஸ்கோர்ஸ் சிஎஸ்ஐ ஆல்சோ தேவாலயத்தின் தலைமை பாதிரியார் சார்லஸ் வின்சென்ட் பேசுகையில், காலச் சூழலுக்கேற்ப நமது மதிப்பீடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.



நமது முன்னோர்கள் சொல்லும் கதையைக்கூட அதே பாணியில் காலங்காலமாக கூறாமல் அக் கதையைக் கூட இன்றையக் காலச்சூழலுக்கேற்றார் போல பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டும்.

சாலிடாரிட்டி அமைப்பு சமூக ஒற்றுமைப் பிரச்சாரம் தமிழகமெங்கும் சுற்றி இன்று கோவையில் நிறைவு செய்துள்ளது. உங்களை மனமார வாழ்த்துகிறேன்.



மனித நேயத்தோடு ஒற்றுமை அன்பு போன்றவற்றைக் கொண்டு வகுப்பு துவேசங்களை விரட்டவேண்டும். உங்களோடு நாங்கள் என்றென்றும் இருப்போம் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...