கிணத்துக்கடவு அருகே பள்ளி மாணவி மாயம் - போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் கிணத்துகடவு அருகே வீட்டில் தனியாக இருந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மாயமானது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கிணத்துகடவு அருகே வீட்டில் தனியாக இருந்த மாணவி மாயமானது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் குணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த (14) வயது மாணவி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவி மட்டும் வீட்டில் தனியாக விட்டுவிட்டு தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் காய்கறி வியாபாரத்திற்கு சென்று விட்டனர். காய்கறி வியாபாரம் முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்த போது வீட்டில் இருந்த மாணவி காணாமல் போனது தெரிய வந்தது.

இதனையடுத்து மாணவியை பெற்றோர்கள் அக்கம் பக்கம் தேடியும் கிடைக்காததால் இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...