போலீசை துப்பாக்கியால் சுட முயற்சி - கொலை வழக்கில் சரண்டரான குற்றவாளி அத்துமீறல்!

கோவையில் நடந்த சத்தியபாண்டியன் கொலை வழக்கில் சரணடைந்த முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராஜா, விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றார். தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் சந்திரமூர்த்தி, சஞ்சய் ராஜாவின் காலில் துப்பாக்கியால் சுட்டு அவரை, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



கோவை: கோவை ஆவாரம்பாளையம் அருகே இளநீர் கடையில் நின்று கொண்டிருந்த சத்திய பாண்டியன் என்பவரை மர்மகும்பல் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக, கோவை மாநகர போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராஜா என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.

அவரை போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க மாநகர போலீஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தற்போது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் இவர்கள் சீன துப்பாக்கிகளை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனிடையே, கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கிகளை கண்டறியும், நோக்கில் சஞ்சை ராஜாவை ஆய்வாளர் கிருஷ்ணலீலா, உதவி ஆய்வாளர்கள் சந்திரமூர்த்தி, சந்திரசேகர் உள்ளிட்ட காவலர்கள் கரட்டுமேடு முருகன் கோவில் அருகே அழைத்துச் சென்று கை துப்பாக்கியை எடுக்க முயன்றனர்.



அப்போது, சஞ்சய் ராஜா துப்பாக்கியை எடுத்து ஆய்வாளரை நோக்கி சுட்டுள்ளார். மேலும், உங்களை கொல்லாமல் விடமாட்டேன் என கூறியவாறு மீண்டும் சுட முயன்ற போது, அங்கிருந்த உதவி ஆய்வாளர் சந்திரமூர்த்தி சஞ்சய் ராஜாவின் காலில் தற்காப்புக்காகச் சுட்டார்.



இதில் காயமடைந்து, துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு விழுந்த சஞ்சய் ராஜாவை போலீசார் மடக்கிப்பிடித்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது காவல் ஆய்வாளரை, ரவுடி துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...