சுவரொட்டிகளால் கலையிழக்கும் கிணத்துக்கடவு மேம்பால தூண்கள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதைத் தடுப்பதோடு, அழகிய ஓவியங்களை தூண்களில் தீட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் கடந்து செல்கின்றன. பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடமாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும் இது இருந்து வருகிறது.

இந்நிலையில், இங்குள்ள மேம்பாலத்தின் தூண்களில் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளபோதும், அதனை மீறி அதிக அளவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுவருகின்றன. அரசியல் கட்சியினர், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற சுவரொட்டிகளால் மேம்பாலத் தூண்கள் கலையிழந்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதால் அவை அலங்கோலமாகக் காட்சியளிக்கின்றன. இதைத் தடுக்க, வண்ண வண்ண ஓவியங்களை தூண்களில் தீட்ட வேண்டும். மேலும், தடையை மீறி தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...