கோவையில் இளைஞரிடம் பர்ஸ் பறிப்பு - கேரளாவை சேர்ந்த ஒருவர் கைது!

கோவை காந்திபுரத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெரியசாமி என்பவரின் பர்சை திருடிக்கொண்டு கேரள கூலித்தொழிலாளி மாரிமுத்து தப்பியோடினார். பொதுமக்கள் உதவியுடன் மாரிமுத்துவை விரட்டிப்பிடித்து காவல்நிலையத்தில் பெரியசாமி ஒப்படைத்தார். மாரிமுத்து பறித்து சென்ற பர்சிலிருந்த 8,000 ரூபாய் பணம் பத்திரமாக மீட்கப்பட்டது.


கோவை: திருச்சி மணப்பாறை நவகுடி கிராம பகுதியைச் சார்ந்தவர் பெரியசாமி (வயது29). இவர் பேக்கரி ஒன்றில் காசாளராக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே ஈரோடு செல்கின்ற பேருந்தில் செல்வதற்காக அவர் நின்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்கிருந்த நபர் ஒருவர், பெரியசாமி பர்சை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். உடனடியாக அவரை பின்னால் துரத்திய பெரியசாமி பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் பர்ஸை பறித்துக் கொண்டு தப்பி ஓடியவர் மாரிமுத்து (வயது44) என்பது தெரிய வந்தது. கேரளாவைச் சார்ந்த இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து, மாரிமுத்து மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மாரிமுத்து பறித்து சென்ற பர்சிலிருந்த 8,000 ரூபாய் பணம் பத்திரமாக மீட்கப்பட்டது. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பெருமளவிலான மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட விரட்டிப் பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...