சூலூரில் உண்டியல் திருட்டு வழக்கில் இளைஞர் கைது - அடிதடி வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிக்கினார்

சூலூர் காவல் நிலையத்திற்கு அடிதடி வழக்கு விசாரணைக்கு வந்த நாகம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஷ்ணு என்பவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், அதே பகுதியில் ஐயப்பன் கோவில் உண்டியல் உடைத்து திருடிய வழக்கிலும் தொடர்பு இருப்பதை அறிந்து விஷ்ணுவை கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள நாகமநாயக்கன்பாளையம் பகுதியில் ஐயப்பன் கோவில் உள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து திருடப்பட்டதாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக கோவிலில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணையை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று அதே பகுதியில் நடந்த ஒரு அடிதடி வழக்கு ஒன்றில் விசாரணைக்காக இளைஞர் ஒருவர் காவல்நிலையம் வந்துள்ளார். அப்போது எதேச்சையாக கோவில் நிர்வாகிகள் சிலர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.



அப்போது, கோவில் உண்டியலை உடைத்த நபரைப் போலவே இருந்த இளைஞரைப் பார்த்து சந்தேகம் அடைந்த கோவில் நிர்வாகிகள் அது குறித்து ஆய்வாளரிடம் தெரிவித்தனர்.

சுதாகரித்துக் கொண்ட போலீசார் அடிதடி வழக்கில் விசாரணைக்கு வந்த இளைஞரைப் பிடித்து தங்கள் பாணியில் விசாரித்தனர். அதில், அவர் நாகம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் விஷ்ணு(வயது27) என்பதும், உண்டியல் உடைத்து திருடியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உண்டியல் திருடன் தானாக காவல் நிலையம் வந்து சிக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...