பட்டாக் கத்தியுடன் இளம்பெண் வீடியோ - கைது செய்ய தனிப்படை அமைத்த கோவை போலீசார்

கோவையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் புகைப்பிடித்தவாறு பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம் பெண்ணை பிடிக்க மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.



கோவை: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வன்முறையை தூண்டும் வகையில், வீடியோ வெளியிட்ட இளம் பெண்ணை பிடிக்க மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் நடைபெற்ற கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து மாநகர போலீசார் ரவுடிகளை கண்காணித்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது வரை சுமார் 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களையும் சைபர் கிரைம் போலீசார் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் “பிரண்ட்ஸ் கால் மி தமன்னா” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார். அவர் அன்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்பிடித்தவாறு பட்டாக் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “எதிரி போட நினைத்தால், அவனைப் போடும், ஓடுனா கால வெட்டுவோம்” என்ற வன்முறையை தூண்டும் வகையிலான பாடலுடன் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பெண் அண்மையில் நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவரை கொலை செய்த நபர்களுடன் இன்ஸ்டாவில் நண்பராக உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாநகர போலீசார் இளம் பெண் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரை பிடிக்க மாநகர போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...