பல்லடம் அருகே வடமாநில தொழிலாளர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய கவுன்சிலர் - வண்ணப்பொடிகளை தூவி உற்சாகம்!

பல்லடம் அடுத்த சித்தம்பலம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுடன், 18வது வார்டு கவுன்சிலர் சசிரேகா ரமேஷ்குமார் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து ஹோலி பண்டிகையை வண்ணப் பொடிகளை தூவி உற்சாகமாக கொண்டாடினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடமாநில தொழிலாளர்களுடன், 18வது வார்டு கவுன்சிலர் சசிரேகா வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான வீடியோக்கள் பரவி வரும் நிலையில், வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் தமிழர்களோடு வடமாநில தொழிலாளர்களும் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் இன்று பல்லடம் அருகே சித்தம்பலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்வில், பல்லடம் நகராட்சி 18வது வார்டு உறுப்பினர் சசிரேகா ரமேஷ்குமார் தனது குடும்பத்துடன் வட மாநில தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் வண்ண பொடிகளை பூசி வடமாநில தொழிலாளர்களோடு ஹோலி பண்டிகையை கொண்டாடினார். வட மாநில தொழிலாளர்களும் அவருக்கு வண்ணப் பொடிகளை பூசி மகிழ்ந்தனர்.



மேலும், வடமாநில இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் வண்ணப் பொடிகளை பூசி மகிழ்ந்தனர்.



பல்லடம் பகுதியில் வடமாநில தொழிலாளர்களுக்கு என்றும் பாதுகாப்பாக இருப்போம் என்றும் தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாகவும் கவுன்சிலர் சசிரேகா ரமேஷ்குமார் உறுதி அளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...