காலில் விழும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே திமுக தான்..! - எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

திமுக அமைச்சர்கள் கல்லெடுத்து எறிகிறார்கள், பெண்களை இழிவாக பேசுகிறார்கள். ஓட்டு போடுகின்ற மக்களை கேவலப்படுத்துகிறார்கள். சுயமரியாதை எனப் பேசிக்கொண்டு காலில் விழும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே திமுக தான் என்று கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.



கோவை: காலில் விழும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே திமுக தான் என பாஜக வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்,

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வட மாநில தொழிலாளர்கள் சம்பந்தமான வீடியோ பிரச்சனைகள் குறித்து, மாநில அரசோ அல்லது முதலமைச்சரோ, எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்ததனால் வடமாநிலத்தில் பல்வேறு போலி செய்திகளுடன் சேர்ந்து ஒரு பெரிய பிரச்சினையாக இங்கு உருமாறி உள்ளது.

வடமாநிலத்தவர்களுக்கு ஹோலி பண்டிகையும்,முக்கியமான பண்டிகை. அதற்கு செல்வோரும் சென்று வரும் நிலையில் அவர்களது இல்லங்களில், இந்த வீடியோ குறித்தான கருத்துக்கள் சென்றதால் ஒரு பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.

முதலமைச்சரின் அமைச்சரவையை சார்ந்தவர்களே, பல்வேறு சமயங்களில் வடமாநில தொழிலாளர்கள் பற்றியும் அவர்கள் செய்கின்ற வேலைகள் பற்றியும் கேவலமாகவும், நியாயம் கற்பிக்கின்ற வகையிலும் நடந்து கொள்கின்றனர். இதை அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டியது முதலமைச்சர் தான்.

முதலமைச்சர் இதனை முளையிலேயே கிள்ளி எரிந்திருந்தால், இது போன்ற சூழல் தற்பொழுது வந்திருக்காது. வடமாநில தொழிலாளர்கள் குறிப்பாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் நிலையில், இந்தப் பிரச்சனையை மாநில அரசு சரியாக கையாளாததால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கக்கூடிய வேலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு இந்த பகுதிகளை பழி வாங்குகின்ற நோக்கத்தில் செயல்படுகிறது. வடமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்படட்டும் என விட்டு விட்டார்களா? என சந்தேகம் எழுகிறது. முதலமைச்சர் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுகின்ற வகையில் உணர்கிறார் என்றால், இந்த பிரச்சனைக்கு மூல காரணம் யார்? இதற்கு முன் பத்து ஆண்டுகள் இது போன்ற நடந்ததா? இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு சமூக ஊடகங்களிலும், இவர்களது அமைச்சர்கள் வட மாநில தொழிலாளர்களை குறிப்பிட்டு பானி பூரி, ஹிந்தி பேசினால் வேலை கிடைக்குமா?, என தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக சிலர் பல்வேறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். வட மாநில தொழிலாளர்கள் வருவதால் தான் தமிழ் மக்களுக்கு வேலை கிடைப்பதில்லை என வெறுப்புணர்வு பிரச்சாரத்தை தூண்டுபவர்களை வேடிக்கை பார்த்துவிட்டு பிரச்சனை வந்த பிறகு தனது ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது என முதலமைச்சர் கூறினால் இதனை உருவாக்கியது நீங்கள் தான்.

முதலமைச்சர் உங்களிடம் இருக்கின்ற தோல்விகளை மறைத்துவிட்டு, அடுத்தவர்கள் மீது பழி போடுகின்ற முயற்சியை செய்யக்கூடாது, முதலமைச்சரின் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக யார் பேசினாலும் நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார். அதில் உறுதியாக இருக்க வேண்டும்.

வட மாநிலங்களில் இருந்து வருபவர்களும் இந்தியர்கள் தானே. இந்தியர்களைப் பற்றி உங்கள் மாநில அமைச்சர்கள் பேசுவதை நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என சொன்னால் எதற்கு இன்னொருவர் மீது பழி போடுகிறீர்கள். இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியதும், இந்த விஷயத்தில் உறுதிப்பாட்டைக் காட்ட வேண்டியதும் நீங்கள்(முதலமைச்சர்)தான்.

பாஜகவில் இருந்து விலகிச் சென்ற ஐடி பிரிவு தலைவர், ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் காரணங்கள் இருக்கலாம், அல்லது அவர்களுக்குள் ஏதேனும் விருப்பம் இருந்திருக்கலாம், இது போன்ற ஒவ்வொரு நபரும் கட்சியிலிருந்து வெளியேறும் பொழுது, அவர்கள் நினைக்கின்ற கருத்துகளைச் சரியா தவறா கூறி வருகிறார்கள்.

ஆனால் இந்த விஷயத்தைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவித பாதிப்பும் வரப்போவதில்லை, எங்களுடைய கட்சி அதிகமான புதிய நபர்களால் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்வுகளில் பங்கேற்கக் கூடிய மாணவர்களை மாநில அரசு தயார்படுத்த வேண்டும். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்நாடு மாணவர்களுக்கு முன்னுரிமை தாருங்கள் எனக் கேட்பது, என்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும்.

போட்டி தேர்வுகளுக்கு தயாராக மாணவர்களை தயார்படுத்தி அவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள தயார் செய்வதை விட்டுவிட்டு தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக அடுத்த வருடம் கேட்பது போல் உள்ளது.

தேசிய அரசியலுக்கு செல்வதாக கூறி வரும் நிலையில் தேசிய அரசியலில் Aடீம், Bடீம் என பல்வேறு டீம்களை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே தேசிய அரசியலுக்கு செல்வதாக கூறினால் மட்டும் போதாது, தேசிய அரசியலில் இருக்கக்கூடிய தலைவர்கள் இடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.

அதற்கு அடிப்படையாக முதலில் தேசியத்தை நீங்கள் நம்புகிறீர்களா? தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசுபவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கிறீர்கள் என்பதை எல்லாம் முதலில் செய்து காட்டுங்கள். அதன் பின்பு தேசிய அரசியலுக்கு வாருங்கள்.

திமுக அமைச்சர்கள் கல்லெடுத்து எறிகிறார்கள், பெண்களை இழிவாக பேசுகிறார்கள் ஓட்டு போடுகின்ற மக்களை கேவலப்படுத்துகிறார்கள். அவர்கள் அனைவரும் எஜமானர்கள் என நினைத்துக் கொள்கின்றனர். ஓட்டு போட்ட மக்கள் அனைவரும் அடிமைகள் போன்றும் நடத்துகின்றனர். ஆனால் சுயமரியாதை எனப் பேசிக்கொண்டு காலில் விழும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே இவர்கள்தான்.

இவ்வாறு, வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...