கோவை வேளாண் பல்கலையில் போட்டி தேர்வு பயிற்சி மையம் - தலைமைச் செயலாளர் இறையன்பு தொடங்கி வைத்தார்

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் மாணவர் நல மையத்தில் அமைக்கப்பட்டுள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை தமிழக தலைமைச் செயலாளர் வே.இறையன்பு திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், மாணவர்கள் முழுமையான கவனத்துடன் உழைத்தால் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம் என்றார்.


கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை தலைமை செயலாளர் இறையன்பு திறந்து வைத்தார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைகழகத்தின், மாணவர்‌ நல மையத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள போட்டித்‌ தேர்வு மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசின்‌ தலைமைச்‌ செயலாளரும்‌, பயிற்சி துறை தலைவருமான இறையன்பு கலந்து கொண்டு போட்டித் தேர்வு மையத்தை திறந்து வைத்தார்.



முன்னதாக இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைகழகத்தின்‌ துணைவேந்தர்‌ கீதாலட்சுமி வரவேற்புரை ஆற்றினார்‌.

அப்போது அவர் பேசியதாவது, இம்மையம்‌ மாணவர்களுக்கு மிகவும்‌ பயனுள்ளதாக இருக்கும், மாதிரி வினாத்தாள்‌ பயிற்சி மற்றும்‌ கடின உழைப்பு மிக அவசியம்.

இத்தகு முயற்சிக்கு கைகொடுக்கும்‌ வண்ணம்‌ அண்ணா பயிற்சி நிலையம்‌ முன்‌ வந்துள்ளது மிகவும்‌ பெருமை கொள்ளத்தக்கது. மேலும்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைகழகத்தில்‌ இம்மையம்‌ அமைக்கச்‌ செய்த தமிழக அரசுக்கு நன்றிகள்.

மாணவர்கள்‌ போட்டித்‌ தேர்வை எதிர்கொண்டு, திறம்பட செயல்பட, இலவசமாக பயிற்சி அளிப்பது பல துறைகளிலும்‌ முன்னேற வாய்ப்பளிக்கும்‌. மாணவர்கள்‌ போட்டித்‌ தோவு எழுதுவதின்‌ மூலம்‌ வேலை வாயப்பை பெறலாம்‌.

கல்விக்கு இடையுறு இல்லாமல்‌, போட்டித்‌ தேர்வு தயார்‌ செய்ய ஏதுவான சூழ்நிலை மற்றும்‌ மனநிலையை ஏற்படுத்த, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைகழகம்‌ அமைந்துள்ளது. மேலும்‌ போட்டி தேர்வுக்கு வைராக்கியமும்‌, அதத கவனமும்‌, கவன சிதைவு இல்லாமலும்‌ கடுமையாக உழைக்க வேண்டும்‌.

ஆழமாக உச்சரித்து படிக்க வேண்டும்‌. மாணவர்கள்‌ பல கோணத்தில்‌ சிந்திக்க வேண்டும்‌. பழைய வினாத்தாள்களை புரட்டி பார்ப்பதோடு சக மாணவர்களுடன்‌ கலந்துரையாடல்‌, விவாதித்து படித்தல்‌ முதலான முறைகளை கையாள வேண்டும்‌.

நேரம்‌ ஒதுக்குதல்‌, இடம்‌ ஒதுக்குதல்‌ மற்றும்‌ அட்டவணை கொண்டு விழிப்புணர்வோடு படித்தல்‌ ஆகியவையே வெற்றி வாய்ப்பை உருவாக்கும்‌.



மனிதவள மேலாண்மை ஆணையர்‌ மைதிலி.க.ராஜேந்திரன்‌, காணொலி காட்சி வாயிலாக வழங்கிய வாழ்த்துரையில்‌ இப்போட்டித்‌ தேர்வு மூலம்‌ வேலைவாய்ப்பு பெற, வாழ்க்கையில்‌ முன்னேற இம்முயற்சி முதல்‌ படியாக இருக்கும்‌. திறன்மேம்பாடு மூலம்‌ பலதுறைகளிலும்‌ முன்னேற மாணவர்கள்‌ முன்‌ வரவேண்டும்‌ என்றும்‌ வேண்டுகோள்‌ விடுத்தார்‌.



இணையவழி மற்றும்‌ நேரடி பங்கேற்பாக ஏறத்தாழ ஆயிரத்திற்கும்‌ அதிகமான இளநிலை மற்றும்‌ முதுநிலை மாணவர்கள்‌, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின்‌ உறுப்பு மற்றும்‌ கிளைக்‌ கல்லூரிகளிலும்‌ மற்றும்‌ கோவையில்‌ உள்ள மற்ற உயர்கல்வி நிறுவனங்களில்‌ இருந்தும்‌ கலந்துகொண்டு பயன்‌ பெற்றனர்‌.

இறுதியாக மாணவர்‌ நலமைய முதனமையர்‌, முனைவர்‌ மரகதம்‌, நன்றியுரை வழங்கினார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...