பல்லடத்தில் ரூ.7.5 கோடி சொத்து மோசடி - அதிமுக நிர்வாகியைக் கண்டித்து தர்ணா!

பல்லடத்தில் 7.5 கோடி ரூபாய் சொத்தை அதிமுக பல்லடம் ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளர் மோசடி செய்துவிட்டதாகவும், அதை மீட்டுத்தர வலியுறுத்தியும் கரைப்புதூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சந்தோஷ்குமார் என்பவர் தனது தாய் தனலட்சுமியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயபாளையம் புதூரை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது கணவர் பொன்னுச்சாமி. இவருக்கு ராதா, யமுனா என்ற மகளும் சந்தோஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். தனலட்சுமியின் கணவர் பொன்னுச்சாமி கடந்த 2014 ஆம் ஆண்டு உடல் நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது மருத்துவச் செலவிற்காக அவர்களுக்கு சொந்தமான இடத்தினை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர்.

கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் சந்தோஷ்குமாரின் நண்பர் கோவையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவர் 15 லட்சம் ரூபாய் வேறு இடத்தில் கடன் பெற்று தருவதாக கூறி பைனான்சியர்களை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்த சொத்து பத்திரத்தை மீட்க ஜெகதீஸ்வரன் 3 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து சொத்து பத்திரத்தை மீட்ட தனலட்சுமி குடும்பத்தினர் அந்த பத்திரத்தை மீண்டும் கடன் பெறுவதற்காக ஜெகதீஸ்வரனிடம் கொடுத்துள்ளனர்.

பின்னர் உங்கள் சொத்தினை அடமானம் வாங்க அனைவரும் மறுக்கிறார்கள் எனக் கூறி சொத்தினை கடன் கொடுப்பவர்களின் பெயருக்கு கிரையம் செய்து கொடுத்தால் மட்டுமே கடன் கிடைக்கும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடனை முழுமையாக கட்டிய பின்பு உங்கள் பெயருக்கே மீண்டும் கிரயம் செய்து கொடுத்து விடுவோம் என கூறி தனலட்சுமிக்கு சொந்தமான இடத்தை மோகன் என்பவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு கிரயம் செய்து கொடுத்துள்ளனர்.

கிரையம் முடிந்த பின்பு ஒரு வார காலத்தில் 10 லட்சம் ரூபாய் பணத்தினை கொடுத்து விடுகிறோம் என்று ஜெகதீஸ்வரன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் கடன் தொகையை கேட்டதற்கு தனலட்சுமி குடும்பத்தினரை அலைகழித்ததாகவும், பின்னர் ஜெகதீஸ்வரன் கோவையில் மோசடி வழக்கில் சிறைக்கு சென்றதும், தனலட்சுமி குடும்பத்தாரின் சொத்தினை மோகன் என்பவர் மற்றொரு பைனான்சியர் கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவியின் கணவரும் அதிமுக பல்லடம் ஒன்றிய இளைஞரணி துணை செயலாளருமான கோவிந்தராஜ் என்பவருக்கு விற்பனை ஆவணம் ஏற்படுத்தி கொடுத்ததாகவும் தெரிகிறது.

இதுகுறித்து மோகனிடம் கேட்டதற்கு குடும்பத்தையே கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, சொத்து பத்திரங்கள் கீர்த்தனா, ஜவகர், கருப்பசாமி, ராஜ் ஆகியோருக்கு கைமாறிக் கொண்டே இருந்த நிலையில் நான்கு வருடங்களாக சொத்தையும் இழந்து பணத்தையும் பெற முடியாமல் தனலட்சுமி குடும்பத்தார் தவித்து வருவதாக கூறுகின்றனர்.



சொத்து ஆவணங்களை தருமாறு தனலட்சுமியின் மகன் சந்தோஷ்குமார் கேட்டதற்கு அவர் மீது தாக்குதல் நடத்தியதாக பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இரண்டு வருடங்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.



இந்நிலையில், தனலட்சுமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தற்பொழுது மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாததால் தனது மகன் சந்தோஷ் குமாருடன், கரைப்புதூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கோவிந்தராஜிடமிருந்து ஏழரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்களின் சொத்தை மீட்டு தாருங்கள் என காவல் துறை அதிகாரிகளின் காலில் விழுந்து தனலட்சுமி அழுது புலம்பிய சம்பவம் அங்கு இருந்தவர்களை கண்கலங்க வைத்தது.



மேலும் இதுகுறித்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததன் பேரில் தனலட்சுமி குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...