கோவையில் தொடர் இருசக்கர வாகனம் திருட்டு - இளைஞர் கைது செய்து 3 வாகனங்கள் பறிமுதல்

கோவையில் நள்ளிரவில் இருசக்கர வாகனங்கள் திருட்டு அடிக்கடி நடந்து வருகிறது. இந்த திருட்டில் ஈடுபட்ட ஒண்டிபுதூரை சேர்ந்த விஜயகாந்த் என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவையில் நள்ளிரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டு வருகின்றன.

சாவி இன்றி, வயரை கழட்டி, லாக்கை உடைத்து லாவகமான முறையில் வாகன கொள்ளை அரங்கேறிய நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருடர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில் ஒண்டிப்புதூரில் வசிக்கின்ற விஜயகாந்த் என்ற நபர் கைதாகியுள்ளார். பொது இடங்களுக்குச்சென்று இருசக்கர வாகனங்களை திருடுவது விஜயகாந்த்தின் வாடிக்கை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

விஜயகாந்தை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். ஐ லவ் கோவை பார்க்கிங், ராஜ வீதி, வடகோவை உள்ளிட்ட இடங்களில் திருடப்பட்ட 3 இருசக்கர வாகனங்களை விஜயகாந்திடமிருந்து மாநகர போலீசார் மீட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, வாகன கொள்ளையில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...