கோவையில் மாடியிலிருந்து தவறி விழுந்து 12ம் வகுப்பு மாணவி பலி - போலீஸ் விசாரணை

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங்யுனிட் குடியிருப்புப் பகுதியில் 13வது மாடியில் இருந்து தவறி விழுந்து 12ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். மாணவி தவறிவிழுந்து உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான 1848 வீடுகள் உள்ளன. இவைகள் ஏ, பி, சி டி என 4 பிரிவிகளாக பிரிக்கப்பட்டு அரசு ஊழியர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டி பிளாக்கில் 13வது மாடியில் வசித்துவரும் கோவை மாநகராட்சியில் வேலை செய்யபவரின் மகள் தாரணி என்பவர் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்றிரவு இரவு 9 மணி அளவில் திடீரென 13வது மாடியில் இருந்து மாணவி கீழே விழுந்துள்ளார். இதில், அவருக்கு தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



அவர் நேற்று பொதுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் பெற்று வந்த நிலையில், மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் அறிந்து துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.



உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தாரணி தவறிவிழுந்து உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...