கோவையில் நண்பர் வீட்டில் தங்க நகை திருட்டு - மதுகுடிக்கச் சென்றபோது கைவரிசை!

மனைவி வெளியூர் சென்ற நேரத்தில் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத், நண்பர்களை வீட்டுக்கு அழைத்து மது விருந்து அளித்துள்ளார். அப்போது வினோத் வீட்டில் இருந்த 3 சவரன் தங்க நகையை திருடிய அவரது நண்பர் நாமக்கல்லைச் சேர்ந்த பீஷ்மர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை ராமநாதபுரம் சக்தி நகர் பகுதியில் சேர்ந்தவர் வினோத். இவரது தாயார் மேட்டுப்பாளையத்தில் வசித்து வருகிறார்.

இவரைப் பார்ப்பதற்காக இவரது மனைவி ராகப்பிரியா மேட்டுப்பாளையம் சென்றுவிட்டார். அப்போது வினோத் தன்னுடன் பணியாற்றும் நான்கு நண்பர்களுடன் வீட்டில் அமர்ந்து மது குடித்துள்ளார்.

இந்த நிலையில், ராகப்பிரியா மேட்டுப்பாளையத்திலிருந்து வந்து வீட்டில் தன் உடைமைகளை பார்த்தபொழுது மூன்று சவரன் தங்க நகை காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது வினோத் தனது நண்பர்களுடன் மதுகுடித்ததைத் தெரிந்து கொண்ட ராகபிரியா, அதில் யாரேனும் ஒருவர் நகையை திருடி இருக்கலாம் என சந்தேகித்தார்.

இதையடுத்து, ராகப்பிரியா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ராமநாதபுரம் போலீசார், வினோத்தின் நண்பர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நாமக்கல்லைச் சேர்ந்த பீஷ்மர் என்ற நபர் நகையை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை ராமநாதபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுகுடிக்கச் சென்றபோது நண்பர் வீட்டிலேயே நகைத் திருட்டில் ஈடுபட்ட நபர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...